மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இருவர் பலி

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் நேற்று 13 ஆம் திகதி இரவு நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர்களும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் ஒருவர் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார், மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் மாற்றப்பட்டபோது உயிரிழந்தார்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரண்டு பயணிகளும் காயமடைந்து புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்ட்னர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *