இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரான ஜூலி சங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(12) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்போது, ஜூலி சங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.
அத்துடன், ‘டித்வா’சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு ஜனாதிபதி தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.