இலங்கை – சீன வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் 17 உயர் மட்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்தநிலையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று (12) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

சீனாவிற்கு சொந்தமான பீஜிங் விமான சேவையின் விசேட விமானம் ஊடாக அவர்கள் இவ்வாறு வருகை தந்தனர். அவர்களை வரவேற்கும் வகையில் இலங்கைக்கான சீன தூதுவர் ஷி ஷென்ஹொன்க் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, முக்கிய கொள்கை அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் முக்கிய பொருளாதார முயற்சிகள் குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *