தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி என்று கேட்டால் உடனே ரசிகர்கள் டிடி என்று தான் கூறுவார்கள்.
இளம் வயதிலேயே தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கியவர் டிரெண்டிற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றி இப்போதும் இளம் தொகுப்பாளினிகளுக்கு டப் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் திடீரென தனது சகோதரர் தர்ஷனின் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அஜர் என்ற வெளிநாட்டு பெண்ணுடன் அவரது சகோதரருக்கு திருமணம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை ஷேர் செய்து தனது சகோதரருக்கு வாழ்த்து கூற பதிவு செய்துள்ளார்.