பிரம்மாண்டமாக தயாராகிவரும் வல்வெட்டித்துறை பட்டப்போட்டி 2026

தெற்காசியாவின் பிரம்மாண்டமான பட்டத்திருவிழா இந்த வருடமும் வல்வெட்டித்துறையில் பொங்கலன்று 15.01. 2026 அன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் AAA Media Solutions ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இதற்காக விதவிதமான பட்டங்கள் வானை அலங்கரிக்க தயாராகிவருவதோடு தமிழக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வருகைதரவுள்ளனர்.

இரவிரவாக இசைநிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளதால் சரிகமப பிரபலங்கள் பிக்பாஸ் பிரபலங்கள் என பலரும் யாழ் மண்ணில் இடம் பெறும் பிரம்மாண்டமான வினோத விசித்திர பட்டப்போட்டியினை காண வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத்ததின் சுற்றுலாத்துறை க்கு பெரும் பங்காற்றும் இந்த விழா பெரும் வரவேற்பைப் பெற்ற பொழுதுபோக்கு நிகழ்வாக வருடம் தோறும் இடம்பெற்று வருகின்றது.

Valvettithurai kite festival

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *