எழுத்தாளர் புவஸ்ரினா மெய்யழகனின் என்று தணியும் ? நாவல் வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட ஊடகக் கற்கைகள் துறை
மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய மூன்றாவது நூலான
‘என்று தணியும்’ ஆவண நாவல் வெளியீட்டு விழாவானது ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) காலை 10.30 மணிக்கு ஊடகக் கற்கைகள் துறை மாணவர் செல்வன் RJ டயான் தலைமையில் A1 ராஜா கிரீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரும் கவிஞருமான திரு இ.த..ஜெயசீலன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இதே வேளை சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு மா.இளம்பிறையன், அருட்தந்தை ம.ம. ஞானேந்திரன் அவர்களும் வருகை தந்திருந்தனர். அத்துடன் கௌரவ விருந்தினர்களாக சட்டத்தரணி திரு. பாணுப்பிரியன் , எழுத்தாளரும் தமிழாசிரியருமான கவிஞர் திரு. கனகபாரதி செந்தூரன், மற்றும் சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் உத்தியோகத்தர் திருமதி ஜெ.ஜெயரூபியும் விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து
சமூகவியல் துறை மாணவி
செல்வி.பி.லிவேகா அவர்கள் வரவேற்பு நடனத்தை வழங்கியிருந்தார். விஞ்ஞான பீட உதவி விரிவுரையாளர் செல்வன்.ச.யாழவன் வரவேற்புரையினை நிகழ்த்தியிருந்தார். தலைமையுரையினை ஊடக கற்கைகள் துறை மாணவர் செல்வன் கொ.டயான் ஆற்றியிருந்தார்.இதே வேளை ஆசியுரையினை அருட்தந்தை அ.யூட் கறோவ் அடிகளார்(அ.ம.தி) வழங்கியிருந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினர் உரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.மா.இளம்பிறையன், மற்றும்
அருட்தந்தை ம.ம.ஞானேந்திரன் நிகழ்த்தியிருந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து கெளரவ விருந்தினர் உரையை சட்டத்தரணி திரு.பு.பாணுப்பிரியன் வழங்கியிருந்தார்.
அதன் பின் நூல் வெளியீடு இடம் பெற்றது நூலினை விருந்தினர்கள் வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியினை A1 ராஜா கிரீம் ஹவுஸ் உரிமையாளர் திரு.சின்னராசா சண்முகானந்தன் பெற்றுக் கொண்டார். பின்னர் சிறப்புப் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து நூலுக்கான வெளியீட்டு உரையை எழுத்தாளரும் தமிழாசிரியருமான கனகபாரதி செந்தூரன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் உரையினை பிரதேச செயலாளரும் கவிஞருமான திரு இ.த..ஜெயசீலன்
அவர்கள் ஆற்றியிருந்தார். அத்துடன் நூலாசிரியர் புவஸ்ரினா மெய்யழகன் அவர்களுக்உ அன்புக்கரம் அறக்கட்டளையினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் அதனைத்தொடர்ந்து புவஸ்ரினாவின் வரிகளில் ஸ்ரீநிர்மலன் இசையில் “யாழ் பல்கலையே”
பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெற்றது. இதில் ஈழத்து இசையமைப்பாளரும் பாடகருமான
ஸ்ரீநிர்மலன், மற்றும் பாடகர்களுமான ஸ்ரீநிருசன், கீர்த்தி , தேனுகாவும் கலந்து கொண்டனர். அவர்களுக்கான நினைவுச்சின்னத்தையும் கௌரவிப்பினையும் பிரதம விருந்தினர்,பிற விருந்தினர்களும் வழங்கி வைத்தார்கள். இந்த நிகழ்விற்கு வருகைதர முடியாத போதிலும் தங்கள் வாழ்த்து செய்தியினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சி.சிறிசற்குணராசா அவர்களும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் அவர்களும் வழங்கியிருந்தார்கள்.
இறுதியாக நூலாசிரியர் புவஸ்ரினா மெய்யழகன் அவர்கள் ஏற்புரையுடனான நன்றியுரையினை ஆற்றியிருந்ததுடன் எழுத்தாளர் மற்றும் ஊடகக் கற்கைகள் துறை மாணவன் Rj டயான் அவர்கள் சிறப்பான முறையில் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கியிருந்தார். இந் நிகழ்விற்கான ஊடக அனுசரனையையை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை ஆசானும் இயக்குனரும் நடிகருமான காரை சிவநேசன் TBN ஊடாக வழங்கியிருந்தார். கள். மேலும் இந்தக் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

pu
puvastina meiyalagan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *