வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக,இன்றைய தினம் ‘கந்தரோடை விகாரை’ எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .பின்னர் அவை , “கந்தரோடை விகாரை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
இந்நிலையிலேயே
கந்தரோடை விகாரைகள் அமையப்பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , ” தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனை அடுத்து வீதிகளில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது.
அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது.